மோசடி வழக்கில் விடுவிக்க முடியாது : திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!!
26 August 2020, 5:31 pmசென்னை : போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.80 கோடி மோசடி செய்த வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது அமைச்சரவையில் செந்தில்பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.
அந்த காலக்கட்டத்தில் போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் செந்தில்பாலாஜி ரூ.4.32 கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து செந்தில்பாலாஜி, சகாயராஜன், பிரபு, அன்னராஜ் ஆகிய நான்கு பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலைமிரட்டல், எமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவக்க கோரி செந்தில்பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் செந்தில்பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.