வேலூர் : இன்னும் சாதி, மொழியை திணித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்று வேலூரில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள கணபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 16 & 17வது பட்டமளிப்பு விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு துறைவாரியாக முதல் இடம் பெற்ற 12 மாணவ, மாணவியருக்கு தங்கப்பதக்கங்களையும், கல்லூரியில் முதலிடம் பிடித்த 44 மாணவர்கள் உள்பட 554 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- கல்வி என்பது ஒவ்வொரு நாளும் மாறக்கூடிய ஒன்றாக தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்பு பெண்கள் படிக்கக் கூடாது என்றும் சில பேர் தான் படிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. பல்வேறு விதமான போராட்டங்களுக்கு பின்பு தான் எல்லா ஜாதியினரும் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் படிக்கலாம் என்ற உரிமையை பெற்று இருக்கிறோம்
பல சட்ட போராட்டங்களுக்குப் பிறகு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, அந்த உரிமை நமக்கும் உள்ளது என்ற நிலைமையை எட்டிப் பிடித்திருக்கிறோம். இதற்குக் காரணம் தொடர்ந்து கேள்வி கேட்டது தான். ஏன் என்று கேள்வி கேட்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. இன்றும் உங்கள் கண் முன்னே பல போராட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது.
தொடர்ந்து நமக்கு இஷ்டம் இல்லாத மொழியையும் ஜாதியையும், மதத்தையும் இந்த சமூகம் திணித்துக் கொண்டே தான் உள்ளது. உங்கள் எதிர்காலம் உங்கள் கைகள் இருக்கிறது. எதிர்காலத்தை மாற்றக் கூடியவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் மாணவர்கள் எதிர்காலத்தில் எதையும் வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும், என்று பேசினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.