பா.ம.கவின் போராட்டம் தேர்தலுக்கான நாடகம் : திமுக எம்பி கனிமொழி விமர்சனம்..!!
1 December 2020, 2:08 pmஈரோடு : வன்னியர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகமாக கருதுவதாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணத்தை ஈரோட்டில் இன்று 2-வது நாளாக தொடங்கிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பிறகு, கருணாநிதி சிலைகளுக்கு மாலையும் அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பெரியார் – அண்ணா நினைவகத்தை பார்வையிட்ட போது கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இந்த அதிமுக ஆட்சி பெரியாரின் கொள்கைக்கு எதிரான ஆட்சி. இதனை முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால், அதைப் பற்றி கருத்து தெரிவிக்கிறேன். பா.ம.கவின் இட ஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகமாக நான் கருதுகிறேன்.
சமூகநீதிக்காக பா.ஜ.க எதுவும் செய்யவில்லை. சமூக நீதிக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. திமுகவை குறை கூட பாஜகவுக்கு அருகதையில்லை. மு.க. அழகிரி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலில் ஈடுபடலாம். அது குறித்து தெரிவிக்க விரும்பவில்லை. திராவிடத்தை யாரும் வீழ்த்த முடியாது. சுயமரியாதை உணர்வை யாரும் வீழ்த்திட முடியாது. இது பெரியார் மண், எனத் தெரிவித்தார்.
0
0