திமுக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் : கோவையில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2021, 2:47 pm
கோவை : பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி கோவையில் சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.டி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் மூலம் பழ வியாபாரம், பொம்மைகள் வியாபாரம், துணி வியாபாரம் உள்ளிட்ட வியாபாரங்களை மேற்கொள்ளும் 30க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் சாலையோர வியாபாரிகளில் அடையாள அட்டை இல்லாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல 15 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், பிரதமரின் ஆத்மநிர்வார் நிதியை அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் நிபந்தனையின்றி வழங்க வலியுறுத்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் மனுவை அளித்து சென்றனர்.
0
0