அரசு அனுமதியின்றி பார் நடத்திய திமுக பிரமுகர்.. கூடுதல் விலைக்கு மது விற்பனை : தட்டிக் கேட்ட பாஜக பிரமுகருக்கு மிரட்டல்…இரு தரப்பு மோதலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 October 2022, 9:06 pm
Dmk Bjp - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி மாவட்டத்தில் பிரச்சனைக்குரிய ஊராட்சி ஆகும். இங்கு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளும் அடிதடிகளும், கலவரங்களும் ஏற்படுவதால் மாவட்டத்தின் பிரச்சினைக்குரிய பள்ளப்பட்டி பகுதியும் ஒன்றாகும்.

இந்நிலையில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே சிப்காட் பகுதி அருகே அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் அரசு அனுமதி இல்லாமல் திமுகவை சேர்ந்த அம்மாவாசை என்பவர் அரசு அனுமதி இல்லாமல் மதுபான பார் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதுபானங்கள் அனைத்தும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டதாக கூறி பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணனின் தம்பி அழகர்சாமி அரசு மதுபான கடையில் சென்று எதற்காக வழக்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு பாரில் இருந்த அடியார்கள் அழகர்சாமியை தாக்கினர்.

இந்த தாக்குதலை கண்டித்து உடனடியாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தனர்.

அழகர்சாமி தாக்கப்பட்டதறிந்த அவரது உறவினர்கள் பதட்டமான பகுதியில் அனுமதி இல்லாத பகுதியில் அமைந்துள்ள பள்ளப்பட்டி மதுபான கடைக்கு சென்று மதுபான பாறை அடித்து நொறுக்கினர்.

இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டும் வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தது அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஏற்ப்படுத்தி உள்ளது.

அரசு மதுபான கடையில் அரசு அனுமதி இல்லாமல் மதுபான பார் நடத்தி வரும் அமாவாசை மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் புகார் அளித்த இருந்த நிலையில் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டது போல் பார் உரிமையாளருக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா அல்லது தட்டிக் கேட்ட பாஜக-வினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பள்ளபட்டி பகுதியில் தற்போது இரு பிரிவினர் இடையே மோதல் வலுத்து உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறை உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள்என கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 411

0

0