அரசு நிலத்தில் பட்டா போட்டு ‘மீன் குட்டை‘ அமைத்த திமுக பிரமுகர் : டி.எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

20 July 2021, 6:19 pm
Dmk Govt Land -Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : ஓரத்தநாடு அருகே புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணதங்குடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் நாதன் செல்வராஜ். இவர் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினராக திமுகவில் பதவி வகித்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அருகே உள்ள மூரியன் குட்டை எனப்படும் குளத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் மீன் குட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில் நேரில் சென்று அரசு இடத்தில் மணல் எடுக்க உரிய அனுமதி வாங்கியுள்ளதா என கேட்டுள்ளார். அப்போது திமுக பிரமுகர் நாதன் செல்வராஜ், இது தன்னுடைய நிலம் என்றும் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என டிஎஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அப்பகுதி தாசில்தாருக்கு, டிஎஸ்பி தகவல் அளிக்க, உடனே தாசில்தார் சீமான், விஏஓ சுபாஷினி, சர்வேயர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து ஆய்வு செய்ததில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தது தெரியவந்தது.

இதையடுத்து திமுக பிரமுகர் நாதன் செல்வராஜ், குட்டை அமைக்க பணியில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளர் ராஜாங்கம், டிராக்டர் ஓட்டுநர் பிரபு, ஜேசிபி ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஜேசிபி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Views: - 224

0

0