நான் ஆளும் கட்சி வேட்பாளர் : போலீசாருடன் மல்லுக்கட்டிய திமுக பிரமுகர்…

Author: kavin kumar
5 February 2022, 10:31 pm
Quick Share

நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் அலுவலகத்திற்குள் செல்ல வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்க கூறிய போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நாகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் நகராட்சியில் நாகூர் 7வது வார்டில் போட்டியிடும் திமுக நாகூர் நகர செயலாளர் செந்தில் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களோடு வேட்பு மனு பரிசீலனைக்கு வந்துள்ளார். அப்போது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதி என கூறியுள்ளனர். இதனால், நகர செயலாளர் செந்திலுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது செந்தில், ‘நான் தான் வேட்பாளர்’ என்று கூறினார். அதற்கான வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்குமாறு போலீசார் கூறினர். அதற்கு அவர், ‘நான் ஆளும் கட்சி என்றும், ரிசிப்ட் காமிச்சாதான் உள்ள அனுப்புவீர்களா?’ என்று போலீசாரிடம் செந்தில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதற்கு போலீசார், ‘ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி ,யாராக இருந்தாலும் சரி வேட்பாளர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பித்தால் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படும்’ என்று கூறியதால் தொடர் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதையடுத்து, திமுகவினர் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

Views: - 1143

0

0