திமுக ஆடு புலி ஆட்டம் ஆடி வருகிறது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு விமர்சனம்!!

16 June 2021, 8:25 pm
Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்ட கழகங்களில் நாளை தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இங்கிலாந்து வாழ் கம்மவார் சமுதாய மக்கள் சார்பில் 200 ஆக்சிஜன் மாஸ்க், 2 ஆக்சிஜன் சிலிண்டர், 2 எக்கோ மிஷின் வழங்கும் நிகழ்;ச்சி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்கைள அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், கம்மவார் சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெளிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி நாளைய அதிமுக மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது. தீர்மானம் இடம்பெறக்கூடிய அம்சங்கள் குறித்து அதிமுக தலைமைக்கழகம் இன்னும் அனுப்பவில்லை, அனுப்பிய உடன் அதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அதிமுக மீது எந்த சாதி சாயத்தையும் யாராலும் பூச முடியாது. அந்த மாதிரி குற்றச்சாட்டு ஒருநாள் செய்தியாகும் தவிர மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு (புகழேந்தி) கருத்துக்கள் கூறுவது ஏற்புடையது கிடையாது.

அதிமுக உறுப்பினர், தொண்டராக இருந்தால் தான் விமர்சிக்க முடியும். நீட் தேர்வில் அதிமுகவிற்கு உடன்பாடு கிடையாது, நீட்தேவை இல்லை என்பது தான் உறுதியான நிலைப்பாடு. ஆகையால் சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்திற்கு மட்டும் மத்தியரசு விலக்கு அளிக்க இருந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி உச்சநீதிமன்றத்தில் தீர்மானத்திற்கு தடை வாங்கினார். நீட் தேர்விற்கு மாணவர்கள் தயராக வகையில் அதிமுக அரசு கொண்டு வந்த பயிற்சி மையத்தில் தற்பொழுதும் பயிற்சி அளிக்கும் நிலை.

அதிமுக ஆட்சிகாலத்தில் 90 சதவீத தளர்வுகளுக்கு பின்னர் தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அதை கண்டித்து போராடியவர் திமுகவினர். ஆனால் இன்றைக்கு முதலில் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளனர்.

திமுக அமைச்சர்கள் தங்கள் துறைபணிகள், கொரோனா தடுப்பு பணிகளை பார்க்கமால் அதிமுகவில் உள்ளவர்கள் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஆடும் புலி ஆட்டம் ஆடி வருகின்றனர். இதனை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார்.

Views: - 175

0

0