தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினம் : ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி..!!!

7 August 2020, 11:58 am
stalin - updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஸ்டாலின் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், இன்று அவரது 2ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள், கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், தி.மு.க. தலைவரும், அவரது மகனுமான மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, தி.மு.க., எம்.பி.யும், மகளுமான கனிமொழியும் அஞ்சலி செலுத்தினார்.

Views: - 9

0

0