“வேற வழி தெரியல ஆத்தா“ : கணக்கு காட்ட அதிமுக பிரமுகருக்கு போலி உறுப்பினர் அட்டை தயாரித்த திமுக!!

28 September 2020, 3:53 pm
FAKE Card DMK - updatenews360
Quick Share

திருப்பூர் : “நம்முடன் இணைவோம் ” திட்டத்திற்கு உறுப்பினர் கிடைக்காமல் அதிமுக நகர செயலாளரை திமுகவில் இணைத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அதிமுக நகர செயலாளராக பணியாற்றி வருபவரை ” நம்முடன் இணைவோம்” திட்டத்தில் திமுக உறுப்பினராக சேர்த்து சமூகவலைத்தளங்களில் பரப்பியுள்ள சம்பவம் புவதாகவும் இதுகுறித்து மணி வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

வெள்ளகோவில் அதிமுக நகர செயலாளராக உள்ளவர் மணி என்கின்ற டீலக்ஸ் மணி .இவர் 1980 ஆண்டு முதல் அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கட்சியில் பலபதவிகளில் பணியாற்றி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கம், வெள்ளகோவில் 3வது வார்டு கழக செயலாளர் , வெள்ளகோவில் 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர், 2004 முதல் இன்றுவரை அதிமுக நகர கழக செயலாளர் ஆகிய கட்சி பதவிகளிலும் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் 8 வருடங்களாக தலைவராகவும் ,கூட்டுறவு வங்கியை சிறப்பாக வழிநடத்துவதற்க்காக தமிழக அரசின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

மேலும் தனியார் அமைப்பான பவர்லூம் ஓனர் அசோசியேசன் தலைவர்,லயன்ஸ் கிளப் தலைவர் போன்ற பல்வேறு பதவிகளில் வசித்து வருகின்றார்.மேலும் நகர பகுதிகளில் அதிமுக கட்சியில் சிறப்பாக செயல்பட்டும் வருகின்றார்.

இந்நிலையில் திமுக தற்போது ” நம்முடன் இணைவோம்” திட்டத்தில் அதிமுக நகரச்செயலாளர் மணி பெயரில் உறுப்பினராக பதியப்பட்டு வாட்ஸ் ஆப் ,பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்புவதாகவும் இதனால் எனக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் என்றும் மேலும் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.

அதிமுகவின் வளர்ச்சியும் பிடிக்காமலும் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளில் திமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவில் உள்ளவர்கள் உங்கள் கட்சியில் இருந்து யாரும் பிரிந்து செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அதிமுக நகர செயலாளர் மணி தெரிவிக்கின்றார்.

மேலும் மணி திமுகவில் உறுப்பினர் இணைந்திருக்கின்றார் என்று அந்த படிவத்தை வாட்ஸ் ஆப் ,பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்புவதாக இதுகுறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார் .

Views: - 0 View

0

0