இன்னும் 27 அமாவசைதான் திமுகவின் ஆட்சிகாலம் : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கணிப்பு…

Author: kavin kumar
11 February 2022, 10:35 pm
Quick Share

கரூர்: தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி வரும் தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பது கூட தெரியவில்லை என்றும், செந்தில்பாலாஜியின் தலைக்கு மேல் கத்தி உள்ளது அமைச்சர் பதவி என்பது மிகக்குறைந்த நாட்களே என்றும் கரூரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, எதிர்கட்சி தலைவரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “வருகின்ற நகரமைப்பு தேர்தலினை திமுக அரசு தடுத்து நிறுத்த எவ்வளவோ, முட்டுக்கட்டை போட்டது ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் நடக்கின்றது. கரூரில் உள்ள தற்போதைய திமுக அமைச்சர் எந்த கட்சியிலிருந்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும், பல கட்சிகளுக்கு மாறியவர், வரும் தேர்தலுக்கு எந்த கட்சியில் வேட்பாளராக இருப்பார் என்பது தெரியவில்லை,

ஆனால் அதிமுக வில் இருப்பவர்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை போல், திமுக கட்சி தேய்பிறை போல் தேய்ந்து கொண்டே இருக்கின்றது. அதே போல், அதிமுக விலிருந்து திமுகவிற்கு சென்ற 8 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அதிமுக வில் அடையாளம் காணப்பட்டவர்கள் தற்போது திமுகவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான் அனைவரும், அதிமுக விலிருந்து சென்றவர்கள் தான் திமுக வில் அமைச்சர்கள், அப்படியென்றால் திமுக வில் யாருக்கும் தகுதி இல்லையா…? ஆள்பிடிக்கு வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. இந்த கட்சியில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் அங்கு சென்றுள்ளார்கள். எங்கு சென்று சேரக்கூடாதோ, அந்த இயக்கத்திற்கு சென்று சேர்ந்துள்ளார்.

டாக்டர் எம்.ஜி.ஆர் திமுக ஒரு தீய சக்தி என்று குறிப்பிட்டார். அதே போல் தான் இன்றும் இருந்து வருகின்றது. மேலும், அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது, தமிழக அளவில், ஏன் என் தொகுதியிலேயே சில வேட்பாளர்கள் திமுக வில் ஜெயித்தார்கள். நாங்களும் ஜனநாயக முறைப்படி தான் அவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவித்தோம், அது தான் அதிமுக இயக்கம், ஜனநாயக முறைப்படி, நடந்து கொள்வோம், ஆனால், இங்குள்ள அமைச்சர் என்ன செய்கின்றார், யாரெல்லாம் தேர்தலில் நிற்கின்றார்களோ, அவர்களை மிரட்டுவது, போலீஸ் கொண்டு பொய் கேஷ் போடுவது. என்று செய்து வருகின்றார். அதற்கு வேறு தொழில் செய்யலாம் என்றார்.

தில் திராணி இருந்தால் அரசியல் ரீதியாக மோதலாம், அதை விட்டு விட்டு வேட்பாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது இதெல்லாம், ஏன்…? நான் கூட 4 ½ வருடங்களாக தமிழக முதல்வராக இருந்தேன், அப்போது காவல்துறை ஸ்காட்லாந்து போலீஸ் போல் நேர்மையான முறையில் பணியாற்றினார்கள். ஆனால் தற்போது திமுக வின் கைப்பாவையாக செயல்படுகின்றது. இந்திய நாட்டிலேயே மிகவும் திறமை வாய்ந்த இந்த காவல்துறை தற்போது திமுக அமைச்சர்களுக்கும், திமுக கட்சிக்கும் ஏவல்துறையாக செயல்பட்டு வருகின்றது. ஆகையால், நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற விதத்தில் 2024 ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும், ஆகையால் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி,

ஆகவே ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும், ஆகையால், சிந்துத்து நடுநிலையாக காவல்துறை செயல்பட வேண்டும், மேலும், முதல்வராக எதற்கு வருகின்றோம், எதற்காக மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். இப்போது உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன வேலை செய்கின்றார். அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது எதற்காக, மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே, ஆனால் தற்போது உள்ள அமைச்சர்கள் எப்படி கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது என்று ஆலோசிப்பது தான் இவர்களது வேலையா ? இதில் திறமை வாய்ந்தவர் கரூரில் உள்ளவர் அதில் கை தேர்ந்தவர், ஆகையால் செந்தில்பாலாஜி தலைமேல் கத்தி தொங்குகின்றது.

அதை மறந்து விட வேண்டாம்., அமைச்சர் பதவியும் சில நாட்கள் தான் காட்சி மாறும் என்றார். மேலும், தற்போதைய திமுக அரசு வாரிசு அரசியல் என்றதோடு, ஏற்கனவே கருணாநிதி, தற்போது மு.க.ஸ்டாலின், பின்பு உதயநிதி, என்றதோடு, தமிழக அளவில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகின்றது. திமுக அரசினையும் திமுக வினையும் தூக்கி பிடிப்பது இந்த ஊடகம் மட்டுமே என்று ஊடகங்களை குற்றம் சாட்டினார். இந்த 9 மாவட்ட காலத்தில் தமிழக அளவில் என்ன செய்தார்கள். குறிப்பாக கரூர் மாவட்டத்திற்கு என்ன செய்தார். ஈசிஆர் ரோட்டில் சைக்கிளில் செல்கின்றார். நடைபயணம் செல்கின்றார். அதற்காக எதற்கு அத்தனை போலீஸார். நீங்க நடைபயணம் மற்றும் சைக்கிள் செல்வதற்கு காவல்துறை எதற்கு அத்தனை போர், பின்பு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகின்றார்.

இவரது உடல் திடகாத்திரமாக உள்ளது என்று எல்லோரும் நம்புகின்றோம், ஆனால் இவ்வாறு செய்வதால் ஒரு சந்தேகம் கூட எழுகின்றது. ஒரு விளம்பரம் தான்…? மு.க.ஸ்டாலினுக்கு, இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராம், ஆட்சிக்கு வந்து 9 மாத காலமே ஆகின்றது. அதற்குள் நம்பர் ஒன் பொய் பேசுவதில் நம் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே, இதை நான் கூறினால், சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தோற்று விட்டார் விரக்தியில் பேசுகின்றேன் என்று கூறுகின்றார். திமுக வின் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்வது அதிமுக ஆட்சியில் மட்டுமே, எனக்கு தெரிந்த வரை, ஏன் இந்தியாவிலேயே இத்தனை அறிவிப்புகள் வெளியிட்ட ஒரே கட்சி திமுக கட்சி தான், அத்தனை அறிவிப்புகள் அறிவித்து எதையும் செய்யவில்லை,

இங்கே கரூர் வந்த உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் கேட்கின்றார்கள். இல்லத்தரசிகளுக்கு ரூ ஆயிரம் தருகின்றீர்கள், என்று கேட்டதற்கு, அதற்கு உதயநிதி ஸ்டாலின், இன்னும் 4 வருடங்கள் இருக்கின்றதே என்று மலுப்பியுள்ளார். 4 வருடங்கள் கழித்து நாம்ம் போட்டு விடுவார்கள்., பெட்ரோலுக்கு மட்டும் ரூ 3 மட்டும் குறைத்துள்ளார்கள். டீசல் விலையை குறைக்க வில்லை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை குறைத்துள்ளார்கள். தமிழகத்தில் குறைக்கவில்லை. மேலும், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்று கூறினார்கள். 48 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளார்கள். ஆனால் தகுதியானவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்று கூறியுள்ளார்கள்.

அதில் 13 லட்சம் பேர்கள் மட்டுமே தகுதி என்றும் மீதமுள்ள 35 லட்சம் பேர் தகுதியில்லை என்று கூறியுள்ளனர். பரிதாப நிலையில் தமிழக மக்கள் பார்த்துள்ளனர். மு.க.ஸ்டாலின் பேச்சினை கேட்டு, உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்டவர்கள் தற்போது அபராத வட்டியுடன் கடன் தொகையுடன் அசல் கட்டி வருகின்றனர். ஆகையால் தமிழக மக்கள் அதை எல்லாம் எப்போதும் மறக்க மாட்டார்கள். ஆகவே மக்கள் எப்போதும் அதிமுகவினை ஆதரிப்பார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, எம்.பியும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Views: - 347

0

0