மகாபலிபுரத்தில் ரகசியமாக 1000 ஏக்கர் நிலம் வாங்கிய திமுக.. எதற்கு தெரியுமா? அண்ணாமலை வெளியிட்ட பகீர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 6:18 pm
annamalai - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தை மகாபலிபுரம் பகுதியில் மாற்றுவதற்கான மறைமுக பணிகளை திமுக அரசு துவங்கியுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வருகை தந்தார்‌.

சாமி தரிசனம் செய்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது: கடந்த அதிமுக ஆட்சியில் வால்மார்ட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய கட்சிகள் அனைத்தும், தற்போது லூலு நிறுவன விஷயத்தில் அமைதியாக இருந்தாலும், தமிழகத்தில் லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்றும், சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிடமாட்டோம்.

இந்த நிறுவனத்தால் நமது சாலையோரத்தில் மளிகைக்கடை வைத்துள்ள அண்ணாச்சி, பூக்கடை வைத்துள்ள அக்கா, சிறுவியாபாரம் செய்யும் அண்ணன் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவர்.எனவே பாஜக அனுமதிக்காது என்றும், தமிழக ஆளுநர் சாதாரண மனிதர் கிடையாது. அவர் உளவுத்துறையில் 35ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவம் உள்ளவர்.

நாகாலந்தில் கவர்னராக இருந்த அவர் கூறும் கருத்து எதுவும் தவறாக இருக்காது‌. குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த யாரும் ஆளுநரின் கருத்தை மறுக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தங்கள் இருப்பை காண்பிக்க வேண்டும் என்பதற்காக தினமும் ஆளுநரை வசை பாடுவதாகவும், இதன் மூலம் திமுக தலைமைக்கு தங்களது விசுவாசத்தை காட்டிக்கொள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை என்பது சட்டமன்றத்திற்குள் சாதனையாகவும், சட்டமன்றத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு சோதனையாகவும் இருப்பதாக தெரிவித்தார்‌.

மேலும் திமுக அரசு முடிந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றுவதற்கான வேலைகளை திமுக அரசு ஆரம்பித்துள்ளதாகவும், இதற்காக ஆறாயிரம் ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டு சட்டமன்ற பணிகள் துவங்க அரசாணை போட்டுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பாஜக எதிர்க்கும் என்பதற்காக சில திருட்டு வேலைகளை செய்து வருவதாகவும், அங்கே திமுக அலுவலகம் அமைப்பதற்காக இடம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக திமுகவை சேர்ந்த 6 அமைச்சர்கள் பினாமி பெயரில் மகாபலிபுரம் பகுதியில் நூறு ஏக்கர் வரை நிலம் வாங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

திமுகவின் கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பணம் சம்பாதிப்பதற்காக புதிய சட்டமன்றம் அமைக்க முயல்வாதாகவும், அதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். எனவே புதிய சட்டமன்றம் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வரலாம் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். புதிய சட்டமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 498

0

0