மலிவான அரசியல் செய்வதை திமுக நிறுத்த வேண்டும் : பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி…
Author: kavin kumar1 February 2022, 9:50 pm
சென்னை : மொழி ,அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் திட்டங்களை திமுக ஒதுக்க கூடாது எனவும், அரசியலை மறந்து மத்திய அரசுடன் திமுக இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சென்னை தியாகராயநகர் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தது வரலாற்று சிறப்புமிக்க , அற்புதமான நிதி நிலை அறிக்கை. அடுத்த தலைமுறைக்கானது. கொரோனாவால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் உலகின் பெரிய நாடுகளில் அதிக பொருளாதாரத்தை ஈட்டி இந்தியா சாதனை, சீனாவே பின்தங்கிவிட்டது. கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்துள்ளது.வேளாண் வளர்ச்சி 3.9 விழுக்காடு உயர்ந்துள்ளது.
குடிநீர் , மின்சாரம் , வீடு , சுகாதாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் 60ஆயிரம்கோடி குழாய் இணைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்பு 9சதவீதமாக இருந்த குடிநீர் குழாய் இணைப்பு தற்போது 48 சதவீத மக்களை சென்றடைந்துள்ளது. 2கோடியே 37 லட்சம் கோடி ரூபாய் , குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பயன்தரும் கோதாவரி- காவிரி இணைப்பிற்கு 44ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்காக 200 தொலைக்க்கட்சி சேனல்கள் தொடங்கப்பட உள்ளது. மாநில மொழிகளில் பாடம் நடத்தப்படும்.கிராமங்களை மேம்படுத்த 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மூலம் இணைய வழி பணப்பரிமாற்றம் வசதி. மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க , பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம். மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அதிகரிக்கப்படும்.
எந்த கட்சியும் எதிர்பாராத வகையில் 165 கோடிக்கும் மேலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. கல்வி , சுகாதாரம் , தொழில்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ராகுல் இதை ஜீரோ பட்ஜெட் என்கிறார் அது உண்மை இல்லை, இது ஹீரோ பட்ஜெட் . குறையே இல்லாத பட்ஜெட். மனித வளத்தை முறையாக பயன்படுத்தி நாட்டின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழ்நாடு , உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு முனையம் தொடங்கப்படுவதை இரு மாநிலங்களும் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே பதிவு திட்டம் , டிரோன் மூலம் வயல்கள் கண்காணிப்பு விவசாயத்திற்கு உதவும். நிதி பற்றாக்குறை 6.9 ஆக இருந்தாலும் வரும் ஆண்டு 6.4 ஆக குறையும்.
கலாம் கூறிய , புரான் திட்டம் கவனத்தில் கொள்ளப்பட்டு கிராம புறங்களில் கூடுதல் வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கான போக்குவரத்து எளிமைப்படுத்தல்படும். எதிர் கட்சிகள் வாய் திறக்க முடியாத நிதி நிலை அறிக்கை. ஜீரோவின் மதிப்பு தெரியாதவர் ராகுல். அனைத்து மாநில வளர்ச்சியை உள்ளடக்கிய பட்ஜெட் இது. தொழில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களில் மொழி , மலிவான அரசியலை கலந்து விடாமல் திமுக அரசு நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை ஒதுக்கிவிட கூடாது. திமுக மத்திய அரசுடன் இணக்கமாக, அரசியலை மறந்து செயல்பட வேண்டும். நட்டத்தில் இருக்கும் நிறுவனத்தை தனியார்கள் வாங்க மாட்டார்கள். வியாபாரம் செய்வது அரசின் நோக்கமல்ல. அரசு நிர்வாகத்தில் தனியாருக்கும் பங்கு இருக்கிறது.
உரத் தட்டுப்பாடு சில மாநிலங்களில் செயற்கையாகத்தான் உருவாக்கப்பட்டது. வீடு கட்டும் திட்டத்திற்கு இரண்டரை லட்சம்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறும் கே.பாலகிருஷ்ணன் வேண்டுமென்றால் சீனாவில் இருந்து பணம் வாங்கி வரட்டும். புதிய வங்கிக் கிளைகளே தேவைப்படாத அளவு டிஜிட்டல் இந்தியா திட்டம் மாற்றிவிட்டது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக நிதி அமைச்சர் உண்மைக்கு புறம்பாக கூறி வருகிறார். ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட அனைத்தையும் கொடுத்து விட்டனர்.
கார்ப்பரேட் நம்மில் ஒருவர் , தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் கார்பரேட் தான்.75- 80 டாலராக கச்சா எண்ணெய் விலை உயரவுள்ளது. அரசுக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் தொடர்பு கிடையாது.
மீனவர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைதான் தீர்வு . அதற்கு மத்திய அரசு பாலமாக அமையும். கூட்டணி பிரிந்தாலும் அதிமுக , பாஜக இரு கட்சியினரும் சந்தோசமாகத்தான் இருக்கிறோம். ஆட்சியில் இல்லதபோது கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை கூறிய கட்சி திமுக , தற்போது கட்டாய தடுப்பூசி குறித்து பேசி வருகிறது என்று கூறினார்.
0
0