கொங்கு மண்டலத்தில் வீழும் திமுக…! சர்வே முடிவுகளால் அதிர்ந்த ஸ்டாலின்

1 August 2020, 7:38 pm
Stalin 07 updatenews360
Quick Share

சென்னை: வரக்கூடிய 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் மண்ணை கவ்வும் என்று வெளியாகி உள்ள சர்வே முடிவுகளால் ஏகத்துக்கும் அப்செட்டில் இருக்கிறாராம் திமுக தலைவர் ஸ்டாலின்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான அரசியல் களம் தயாராகி வருகிறது என்றே சொல்லலாம். வலுவான கட்சிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு சர்வே முடிவை கையில் வைத்துக் கொண்டு காயை நகர்த்தி வருகிறது.

Stalin-06-updatenews360

அரசியல் களத்தில் அவருக்காக வேலை செய்யும் ஒரு குழுவினரின் ஒரு சர்வேவை கையில் வைத்து கொண்டு கடுகடுவென உள்ளாராம் ஸ்டாலின். ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியை தந்திருக்கிறது அந்த சர்வே முடிவுகள். கோவை உள்பட கொங்கு மண்டலத்தில் திமுக வாஷ் அவுட்டாகும் என்பது தான் அந்த சர்வே.

அதிமுகவுக்கு பல நேரங்களில் கை கொடுத்திருப்பது கொங்கு மண்டலம் தான். குறிப்பாக 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சொல்லலாம். அந்த தேர்தலில் யாருக்கு அரியணை வாய்ப்பு என்பது கணிக்கமுடியாதபடி இருந்தது. காரணம்… மக்களின் மனநிலை அப்படி.

தேர்தலும் நடந்து, முடிவுகளும் வெளியான போது அதிமுக மீண்டும் அரியணை ஏறியது. அந்த தேர்தலில் மற்ற பகுதிகளை விட அதிமுகவுக்கு பெரிதும் கை கொடுத்தது கொங்கு மண்டலம் தான். தனி ஒருவராக களத்தில் நின்ற ஜெயலலிதா கொங்கு மண்டலத்தில் ஒரு பிரச்சாரத்தில் பேசும் போது கண்ணுக்கு தெரிந்த வரை தமிழக அரசியலில் அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என்று முழங்கினார்.

 அவரது கர்ஜனை பேச்சு, சூறாவளி பிரச்சாரம் ஆகியவற்றால் அதிமுகவை அரியணையில் உட்கார வைத்தனர் மக்கள். அந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தை அப்படியே அதிமுக அள்ளியது. கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 ல் வெற்றி. ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக ஜெயம்.

sp velumani - stalin - updatenews360

அப்போது ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொல்ல சென்ற எஸ்.பி. வேலுமணியை பாராட்டிய ஜெயலலிதா, கழகம் ஆட்சி அமைக்க பெரிதும் கை கொடுத்தது கொங்கு மண்டலம் தான் என்று பாராட்டினார். அதோடு கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா என அனைவரையும் அமைச்சராக்கினார்.

2016 போன்று இப்போதும் அதிமுகவுக்கு கொங்கு மண்டல மக்கள் கை கொடுப்பார்கள் என்கிறது அந்த சர்வே. இது குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது;

தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை கொடுத்து இருக்கிறோம். மக்கள் நல்ல அபிமானத்தில் உள்ளனர். கோவை மாவட்டம் 50 ஆண்டு கால ஆட்சியில் காணாத வளர்ச்சியை இப்போது 5 ஆண்டுகளில் கண்டுள்ளது. ஆகையால் கழகத்தின் இரும்பு கோட்டை கோவை என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம்.

கோவையில் கட்சி வெற்றி பெற்றால் சட்டசபையில் அதிமுக ஆட்சி அமையும். இந்த சென்டிமெண்ட் இந்த முறையும் நிரூபணமாகும் என்று கூறினார்.

சர்வேக்கள் பொய்த்த வரலாறுகளும் இந்த தமிழகத்தில் உண்டு. ஆகவே எத்தனை சர்வேக்கள் வந்தாலும் மக்களின் தீர்ப்பு தான் வெற்றியை முடிவு செய்யும்… அதுவரை காத்திருக்க வேண்டியது தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்….!

மக்களையும், தனது கட்சி உறுப்பினர்களையும் நம்பாமல் வட இந்திய வாத்தியாரை நாடிய தற்போதைய திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு, தனக்கு சாதகமான குழுவினரின் சர்வேவே திமுகவுக்கு எதிராக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.