அனைத்து கனவுகளும் நிறைவேற வாழ்த்துக்கள் : இந்திய அணியில் இடம்பிடித்த நடராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து..!!

10 November 2020, 4:33 pm
Natarajan- dmk stalin- updatenews360
Quick Share

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான டி20 இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பிடித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே,

கிரிக்கெட் வீரர் நடராஜனின் ஊர்க்காரரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்துக்களை கூறிக் கொண்டார்.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்,“இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் சேலம் நடராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

நடராஜனைத் தொடர்புகொண்டு பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் மேலும் பல உயர்வுகளைப் பெறவும், வெற்றிகளைக் குவிக்கவும், அவர் மூலமாக இந்திய அணிக்குப் பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்.நடராஜனின் அனைத்துக் கனவுகளும் நிறைவேற வாழ்த்துகிறேன்!,” என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 25

0

0