கோவையில் செய்தியாளரை தாக்கிய தி.மு.க.,வினர் : செய்தி சேகரிக்க கூடாது என மிரட்டல்!!

17 January 2021, 10:52 am
DMK- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கியுள்ளனர். மேலும், அவரது செல்போனை உடைத்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் சந்திரசேகரை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.

திமுக.,வினர் ஆட்சியில் இல்லாத போத மக்கள் மீது தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவையில் செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 7

0

0