பேரம் பேசி ஆள் சேர்க்கும் திமுக : அம்பலப்படுத்திய தே.மு.தி.க நிர்வாகி!!

Author: Udayachandran
11 October 2020, 7:37 pm
DMDK DMK - Updatenews360
Quick Share

2021ஆம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களுடன் களமிறங்கி பணியாற்றி வருகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளது.

இந்த நிலையில் திமுகவில் உறுப்பினராக தற்போது ஆன்லைன் மூலம் உறுப்பினர்களை இணைத்து வருகின்றனர். இந்த முயற்சி திமுகவின் இன்னொரு முகத்தையே காட்டி வருகிறது. பல குளறுபடிகளால் திமுக உறுப்பினர் சேர்க்கையில் நடந்துள்ளது.

குறிப்பாக மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள் திமுகவில் உறுப்பினராகிவிட்டதாக உறுப்பினர் அட்டை வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் அமெரிக்க அதிபர் வரை திமுக உறுப்பினர் அட்டை வெளியானது கொஞ்சம் ஓவர்தான்.

இந்த நிலையில் தேமுதிக நிர்வாகி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியையும் திமுகவின் மற்றொரு முகத்தினையும் கிழித்துள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் பேசும் நபர் தான் தேமுதிகவில் இளைஞர் அணி செயலாளராக உள்ளதாகவும், எனது மனைவி மகளிரணி செயலாளராக உள்ளதாக கூறினார்.

மேலும் அவரது தாயை அந்த வீடியோவில் அறிமுகப்படுத்தியவர், திமுகவில் இருந்து அவரது தாய்க்கு உறுப்பினர் அட்டை கொடுத்துள்ளதாகவும், மாதம் மாதம் 500 ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

உறுப்பினர் கார்டுக்கு மாதம் 500 ரூபாய் பணம் கொடுக்கப்படும் என ஏமாற்றி உறுப்பினருக்கு அலையும் திமுகவை நம்பாதீர்கள் என அந்த வீடியோவில் தேமுதிக நிர்வாகி கேட்டுக்கொண்டுள்ளார். கலைஞர் இருந்த வரைக்கும் கட்டுக்கோப்புடன் இருந்த திமுக தற்போது ஸ்டாலினிடம் சிக்கி சந்தியெல்லாம் சிரிக்கும் அளவிற்கு மாறியுள்ளதாக மக்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

Views: - 72

0

0