ராமநாதபுரம் தொகுதியை கைப்பற்ற துடிக்கும் திமுக..? தலைமைக்கு கிளம்பிய நெருக்கடி ; அப்செட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!!
திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழுவானது தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த ஆலோசனை குழுவானது இன்று கடலூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனையை நடத்தியது. இதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஒருமித்த கருத்தை கூறினர்.
அதாவது, இந்த முறை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் திமுகவிற்கு கொடுங்கள். திமுக வேட்பாளருக்கு தான் இங்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த முறை இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என ஒருமித்த கருத்தை கூறினர்.
திமுக நிர்வாகிகளின் கருத்தை கேட்டுக்கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர் திமுக ஒருங்கிணைப்பு குழுவினர் கட்சி தலைமையுடன் எடுத்துரைப்பதாகவும் கட்சி தலைமை தான் வேட்பாளர் யார் என இறுதி பட்டியலை வெளியிடுவார்கள் என்றும் கூறியுள்ளனர் .
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட கனி கே.நவாஸ் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.