அழுதுகொண்டே வந்த 10ம் வகுப்பு மாணவி.. திமுக கிளைச் செயலாளர் கைது.. பகீர் சம்பவம்!

Author: Hariharasudhan
15 February 2025, 3:29 pm

திருப்பத்தூரில், 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுக வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (45). இவர், பாச்சல் ஊராட்சியின் 11வது வார்டு உறுப்பினராக உள்ளார். அது மட்டுமல்லாமல், அப்பகுதி திமுக கிளைச் செயலாளராகவும் உள்ளார்.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு மகேந்திரன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில், இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

10th std girl sexual abuse

இதன்படி, புகாரைப் பதிவு செய்த திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், திமுக வார்டு உறுப்பினர் மகேந்திரன், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்ட அதிமுகவினர்.. அமைச்சர் சொன்ன காரணம்!

அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமி, ஜோலார்பேட்டை பகுதியில் வசித்து வந்ததாகவும், இவருக்கு தந்தை இல்லாத நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 14 வயது சிறுமிக்கு பல மாதங்களாக மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் மகேந்திரனை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • I would rather not get married.. 37-year-old Simbu's heroine open திருமணம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன்.. 37 வயதாகும் சிம்பு பட நாயகி ஓபன் டாக்!