கொரோனா காலத்தில் மக்களுக்கு உறுதுணையாக இருந்தது திமுக தான் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

20 November 2020, 4:56 pm
Udhayanithi Stalin- Updatenews360
Quick Share

திருவாரூர் : கொரோனா காலத்திலும் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு உறுதுணையாக இருந்தது திமுக தான் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். இந்த நிலையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆவது உறுதி, நாங்கள் எவ்வளவு தான் பிரச்சாரம் மேற்கொண்டாலும் தொண்டர்கள் நினைத்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். தொண்டர்களால் மட்டுமே வெற்றி பெற செய்ய முடியும் என்றார்.

நாளையும் நாளை மறுதினமும் அதன் பிறகு அடுத்த மாதமும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பெயர் சேர்த்தல் முகாம் நடைபெற உள்ளது இதற்கு திமுகவினர் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கருணாநிதியின் சகோதரி இல்லத்திற்கு உதயநிதி வருகை தந்தார். இதையடுத்து நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

Views: - 13

0

0