நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடர திமுக நிச்சயம் வெற்றி பெறும் : வாக்களித்த பின் அமைச்சர் பொன்முடி நம்பிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 11:02 am
Minister Ponmudi - Updatenews360
Quick Share

விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் 90 வயதுடைய முதியவர்கள் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடித்து ஆர்வத்துடன் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்கு சாவடி மையங்களில் இளைஞர்கள், முதியவர்கள் என  வாக்காளர்கள் ஆர்வத்துடன் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் சண்முகாபுரம் 36 வது வார்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம் பி கெளதமசிகாமணி ஆகியோர் குடும்பத்துடன் வருகை புரிந்து வாக்கினை செலுத்தினர். இதே போன்று இளைஞர்கள், பெண்கள் முதியவர்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர்.

மருதுமேடு பகுதியினை சார்ந்த 90 வயதுடைய வைத்திலிங்கம் என்ற முதியவர் வாக்கினை செலுத்தினார்.

தனது வாக்கினை செலுத்திய அமைச்சர் பொன்முடி திமுக வேட்பாளர் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் தமிழக முதலமைச்சரின் நல்லாட்சி உள்ளாட்சியிலும்  தொடர மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் மொத்தமாக உள்ள 210 பதவிகளில் 208 பதவிகளுக்கு 346 வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 935 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நகர் உள்ளாட்சி தேர்தலில் 64 பதற்றமான வாக்கு சாவடிகள் உள்ளதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 1150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆண் வாக்காளர்கள் – 1 லட்சத்து 42 ஆயிரத்து 22 பேரும், பெண் வாக்காளர் –  1லட்சத்து 51 ஆயிரத்து 109 பேரும், மூன்றாம் பாலினத்தவர் – 55 பேரும் என மொத்தமாக  2 லட்சத்து 93 ஆயிரத்து 186 பேர் வாக்களிக்க உள்ளனர்.

விழுப்புரம் நகராட்சி பொருத்தவரை 42 வார்டுகளுக்கு 129 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் நகரில் மட்டும் 23 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 838 மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் பணியில் 1648 ஆசிரியர்கள் 10 தேர்தல் அலுவலர்கள் 40 உதவி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் பேரூராட்சியில் இரு திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Views: - 670

0

0