விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கும் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

11 October 2020, 12:03 pm
RB Udayakumar - Updatenews360
Quick Share

மதுரை : வெகுவிரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உலக மனநிலை தினத்தை முன்னிட்டு மதுரை தனியார் கூட்டரங்கில் செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் HCL நிறுவனம் சார்பாக கொரோனாவால் மனரீதியாக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநகராட்சியோடு இணைந்து மக்களிடம் பேச தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டது.

தொலைபேசி எண்களை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று காலங்களில் வலிமையுள்ள பாரதபிரதமரால் பாராட்டு பெற்றவர்.மீண்டும் அதிமுக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் வாக்களிப்பதற்கு தயாராக உள்ளார்கள்.

வாக்கு வங்கியை முழுமையாகப் பெறுவதற்கு எடப்பாடியை முன் நிறுத்துவதுதான் சரியான ஒன்று,என அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏகமனதாக ஜனநாயக அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அவர்களை முன் நிறுத்தப்பட்டு உள்ளார்.ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல்வரும், துணை முதல்வரும் ராமர் லட்சுமணன் போன்று செயல்படுகிறார்கள் என்று நாங்கள் பேசி வந்தோம்.அது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் உழைப்பு,தியாகம்,
திட்டங்களை செயல்படுத்துவது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்கள் இடத்தில் சேர்ப்பது என அனைத்திலும் முதல்வர் வெற்றி பெற்று இருக்கிறார்.ஒருநாள் கூட அதிமுக அரசு பிழைக்க முடியாது என்று சொன்னவர்களுக்கு மத்தியில் நான்கு ஆண்டுகள் அம்மாவின் அரசை காப்பாற்றி மீண்டும் அம்மாவின் அரசை மலர வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி இருக்கிறோம்.

பாஜகவின் மாநில தலைவர் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 2016ல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எம்ஜிஆர் சாதிக்க முடியாததை கூட ஜெயலலிதா சாதித்தார்.

ஆரோக்கியமான அரசியல் இருப்பதாக திமுகவினர் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அங்கு பூகம்பம் வெடிப்பதற்கு நேரம் வந்துவிட்டது.பூகம்பம் வெகு விரைவில் வெடிக்கும்.திமுகவில் கருத்து பரிமாற்றம் இல்லை.மிக விரைவில் திமுகவில் பூகம்பம் வெடிக்கும். என்று தெரிவித்தார்.

Views: - 5

0

0