கடவுள் முருகனுக்கு பதில் ஸ்டாலின் : திமுக., நிர்வாகியின் அலப்பரை

26 January 2021, 6:16 pm
Quick Share

கோவை: கோவையின் வெவ்வேறு பகுதிகளில் ஸ்டாலின் இருக்க பயமேன் என்ற போஸ்டர்களை திமுக நிர்வாகிகள் ஒட்டியுள்ளனர்.

கடவுள் மறுப்புக் கொள்கை பேசிவிட்டு, இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தி பேசும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இருப்பவர் தான் திமுக தலைவர் ஸ்டாலின்.தொடர்ந்து இந்து மத மரபுகளை அவமதித்து வந்த ஸ்டாலினின் விழுதுகள் தற்போது பல்டி அடிக்க துவங்கியுள்ளனர்.சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து தான் இந்து மதத்தை ஆதரப்பவன் என்பது போல தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சித்தார்.

ஆனால், ஸ்டாலினின் இந்த செயல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இத்தனை நாட்கள் இந்து கடவுள்களை அவமதித்துவிட்டு, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்து மக்களை குழப்பி ஏமாற்றும் வகையில் ஸ்டாலின் கபட நாடகம் போடுவதாகவும், தேர்தல் அரசியலுக்காக கொள்கையை எல்லாம் தூக்கிப்போடுவதாகவும் பலரும் ஸ்டாலினை வறுத்தெடுத்து வந்தன.இந்த நிலையில், கோவையில் ஸ்டாலினையே மிஞ்சும் அலப்பரையை செய்துள்ளனர் திமுக நிர்வாகிகள்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வணங்குவோருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற வகையில், ‘யாமிருக்க பயமேன்’ என்ற வாசகம் முருகன் கோவில்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால், கோவையில், ‘தலைவர் இருக்க பயமேன்’ என்ற வாசகத்துடன் திமுக.,வினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த.போஸ்டரில் ஸ்டாலின் கையில் வேலுடன் இருக்கும் புகைப்படத்தையும் அச்சிட்டு, அவரது வாரிசு உதயநிதியின் புகைப்படத்தையும் அச்சிட்டுள்ளனர்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் விமானம் மூலமாக இன்று கோவை வந்துள்ளார். அவரை குதூகலப்படுத்த, முருகப்பெருமான அவமதிக்கும் வகையில் திமுக.,வினர் ஒட்டியுள்ள இவ்வகை போஸ்டர் மக்களிடையே கோபத்தை கிளப்பியுள்ளது.

Views: - 0

0

0