திமுக – மார்க்சிஸ்ட் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

6 March 2021, 8:23 am
Quick Share

திமுக – மார்க்சிஸ்ட் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3, மனிதநேய மக்கள் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் 6, இந்திய கம்யூனிஸ்ட் 6 ஆகிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது. ஆனால், 6 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்த நிலையில் திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், திமுக – மார்க்சிஸ்ட் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது.

Views: - 7

0

0