கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி எம.எல்.ஏவும், மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜூனன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், சொத்துவரி உயர்வுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்க்காடு சிங்காநல்லூர் எம்.எல்.ஏ. ஜெயராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ, அதிமுக பி.ஜே.பியிடம் மண்டியிட்டோம் என பேசுகின்றனர், ஆனால் அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்த சொன்னார்கள் ஆனால் அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் ஏற்றவில்லை என தெரிவித்த அவர், செந்தில் பாலாஜியை வளரத்து விட்டது அதிமுகதான் எனவும் மனிதனாக செந்தில் பாலாஜியை கொண்டு வந்தோம் திமுகவிற்கு போய் மிருகமாயிட்டார் என தெரிவித்தார்.
திமுகவினருக்கு நிர்வாக திறமை இல்லை என தெரிவித்த அவர், எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என தெரியவில்லலை எனில் எடப்பாடியிடம் கேளுங்கள் எனவும் தெரிவித்தார்.
திமுக அமைச்சர்கள் 32 பேரும் எப்படி வசூலிக்கலாம் என ரூம் போட்டு யோசிக்கின்றனர் என தெரிவித்த அவர், விரைவில் திமுக அரசு பஸ் கட்டணத்தை ஏற்றபோகின்றது எனவும் தெரிவித்தார்.
போக்குவரத்தை தனியார் மயமாக்க போகின்றோம் என சொல்ல போகின்றனர் என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் 50 தடவை மத்திய அரசு கடிதம் எழுதியும் தைரியமா கட்டணத்தை ஏற்றவில்லை எனவும் அம்மன் அர்ஜூனன் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.