அதிமுகவில் இணைந்த கருணாநிதிக்காக தீக்குளித்த சாமிநாதன்..! திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் அதிரடி மூவ்..!

2 August 2020, 3:58 pm
Saminathan_DMK_UpdateNews360
Quick Share

சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரைச் சேர்ந்தவரும் திமுகவில் 40 ஆண்டுகாலம் பேச்சாளராக இருந்தவருமான சாமிநாதன் தற்போது திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் முன்னிலையில் கட்சியில் இணைந்த சாமிநாதன், “நான் திமுக பேச்சாளராக இருந்தாலும், கொரோனா சமயத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டதை உணர்ந்துள்ளேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. 

மேலும் அவர்கள் கட்சி சார்பிலும் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரணம் வழங்கியுள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தின் அதிமுக மாவட்ட செயலாளர் செந்திநாதன், அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

மேலும் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் மறுத்து அழகுராஜ் சுமார் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கியுள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அதைத் தாங்க முடியாமல் தீக்குளித்தேன். பின்னர் சரியான சமயத்தில் வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சையினால் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்தேன்.

நான் திமுக தலைவர் கருணாநிதி மீது பற்றுக் கொண்டிருந்தாலும், மருது அழகுராஜ் அவர்களின் மக்கள் பணியாள் ஈர்க்கப்பட்டு, எனது தலைமையில் 60’க்கும் மேற்பட்டோருடன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே திமுகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக வளம் வந்த சாமிநாதன் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது, சிவகங்கை வட்டாரத்தில் திமுகவுக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Views: - 0

0

0