Fees கட்டலையா.. School Gateக்குள்ள வராதீங்க : மாணவரை வெளியே அனுப்பி பெற்றோரிடம் பள்ளி தாளாளர் பேசிய ஆடியோ வைரல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 6:10 pm
School Fees Issue - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் செயல்பட்டு வரும் அகிலா வித்யாலயா என்ற பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவரை பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்றால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என மாணவனின் பெற்றோரிடம் பள்ளி தாளாளர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பகுதியில் அகிலா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளியின் உள்ளே அனுமதிக்க முடியாது என அப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோரிடம் பள்ளி தாளாளர் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று குறைந்த பிறகு தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதால் மெட்ரிக் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்திருந்தது.

மேலும் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் யாரையும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கவில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேச வில்லை எனவும் சான்றிதழ் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கும் நிலையில் அகிலா வித்யாலயா பள்ளி தாளாளர் மாணவரின் பெற்றோரிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தினால் அதற்கு முறையான ரசீது வழங்கவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 864

0

1