“பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம்“ : தொடர் கனமழையால் பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரிக்கை அறிக்கை!

16 November 2020, 1:39 pm
Heavy Rain - Updatenews360
Quick Share

கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ ஆற்றில் கடந்து செல்லவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய கட்டங்களில் தங்கவோ, அவற்றுக்கு அருகில் செல்லவோ வேண்டாம் என்றும், பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ அல்லது கடந்து செல்லவோ வேண்டாம் என்றும், இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால் குடைகளை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் மரத்தடியில் நிற்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின உள்ளமாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Views: - 22

0

0