கொடைக்கானல் போற ப்ளான் இருக்கா? இனிமேல் இப்படித்தான் : மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2022, 2:07 pm
Kodaikanal Vaccine -Updatenews360
Quick Share

கொடைக்கானல் : படகு குழாம் மற்றும் பூங்காக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஏரிரிய்ல படகு சவாரி செய்வதற்கும், பூங்காக்களுக்கு செல்வதற்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கும் சான்றிதழ்கள் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகளை படகு குழாம் மற்றும் தோட்டக்கலை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது.

மேலும் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி உபயோகித்தல் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள நடைமுறைகளும் முறையாக பயணிகள் பின்பற்ற அறிவுறுத்தபப்ட்டு வருகிறது. வரும் சுற்றுலா பயணிகளும் தடுப்பூசி செலுத்திக்கொண்டே வரும் சூழலையும் காணமுடிகிறது.

Views: - 415

0

0