கோவையில் தற்போது எத்தனை பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் தெரியுமா?

2 July 2021, 8:28 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரங்களை காட்டிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை அதிக பாதிப்புடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில, நீண்ட நாட்களுக்கு பிறகு கோவையில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்தது. இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. அதன்படி இன்று 486 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20ஆயிரத்து 493ஆக உயர்ந்தது. தவிர, கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 904 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 53 ஆக உள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 338 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேலும், கோவையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 58 ஆக உயர்ந்தது.

Views: - 118

0

1