இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : கோவை மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் தெரியுமா?

20 January 2021, 11:29 am
Cbe Collector- Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் எத்தனை ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்பதை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 30 இலட்சத்து 62 ஆயிரத்து 744 பேர் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஆண் வாக்களரைவிட 43 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் புதிதாக 1 இலட்சத்து 27 ஆயிரத்து 522 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 4 இலட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்களும் , குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 2 இலட்சத்து 5 ஆயிரத்து 335 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து 35 ஆயிரத்து 551 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

Views: - 3

0

0