குடிபோதையில் வந்த அரசு மருத்துவர் மருத்துவமனையிலேயே மட்டையான சம்பவம்… துறை ரீதியான நடவடிக்கைக்கு சிபாரிசு..!!

Author: kavin kumar
21 January 2022, 2:11 pm
Quick Share

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர் போதையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்-மோகனுார் சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மட்டும்மால்லாமல், கரூர், திருச்சி மாவட்டங்களில் இருந்தும் தினமும் 1000க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுக்கும் முன் தமிழகத்திலேயே சிறந்த மருத்துவமனை என நாமக்கல் மருத்துவமனை தரச்சான்றும் பெற்றுள்ளது. அடித்தட்டு மக்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் அனைவரும் இந்த மருத்துவமனையில்தான் எந்த பிரச்னை என்றாலும், சிகிச்சை எடுக்க வந்து போகிறார்கள். இந்த சூழலில்தான், இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் மருத்துவராக பணியாற்றும் சிவானந்தம் என்பவர் நேற்று அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு போதை தலைக்கேறி மயங்கினார்.

இந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை ஊழியர்கள் சிலர் கைதாங்களாக தூக்கிவந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ரோ அறைக்கு அருகே உள்ள மக்கள் சேவை மையம் அறையில் படுக்க வைக்கப்பட்டு சென்றனர். நீண்டநேரம் போதையில் இருந்த அவர் மாலையில் எழுந்து சென்றதாக கூறப்படுகிறது. அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் குடிபோதையில் மயங்கிக்கிடந்தது, மற்ற மருத்துவர்களையும், ஊழியர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி கூறுகையில், ” மருத்துவர் சிவானந்தம் பணி நேரத்தில் போதையில் இருந்தது குறித்து, மருத்துவத் துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பர்,” என்றார்.

Views: - 1964

0

0