பாடகர்களாக மாறிய மருத்துவர்கள்.! சுதந்திரதினத்திற்காக பாடல் பாடிய MUSICAL DOCTORS.!!
14 August 2020, 2:14 pmதிருப்பூர் : சுதந்திரதினத்தை முன்னிட்டு, மருத்துவ துறை பெருமை குறித்து ஐம்பது மருத்துவர்கள் இணைந்து பாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நாளை 74வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக ‘மியுசிக்கல் டாக்டர்ஸ்’ எனும் மருத்துவர்கள் மட்டுமே உள்ள இந்த குழுவில் சுமார் ஐம்பது மருத்துவர்கள், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சிறப்பு பொது மருத்துவம், எலும்புமுறிவு, மயக்கவியல் உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட மருத்துவத்தின் பெருமைகளை, பாரத விலாஸ் திரைப்படத்தில் வரும் இந்தியா நாடு என் வீடு எனும் பாடலின் மெட்டில் ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் இணைந்து பாடிய காணொலியை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
மருத்துவர்களின் வித்தியாசமான இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இக்குழு ஏற்கனவே கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வு பாடலை பாடி அதுவும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.