வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் அனுகுலாஸ் கன்வேன்ஷன் ஓட்டலில் நடந்தது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் ஜுன் 3 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா துவங்கவுள்ளதால் அதனை சிறப்பாக கொண்டாடுவது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் வாரியாக உறுப்பினர்களையும் பொறுப்பாளர்களையும் அமைப்பது மாநகரம் ஒன்றிய பகுதிகளில் திமுக உறுப்பினர்களை சேர்ப்பது ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்காக பாடுபட்ட வேலூர் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பது மகளிருக்கு மாதம் ரூ.1000 அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வை நடந்ததாக யாரும் கருதவில்லை.
நீண்ட நாள் வழக்கு நடந்து அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்டுள்ள அவகாசத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பிருந்தது. நீதிமன்றம் கதவை திறந்தது ஆனால் ராகுல் அதனை பயன்படுத்தும் முன்பே அவசர அவசரமாக இப்படிப்பட்ட தண்டனையை வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த முறையல்ல.
மாபெரும் நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற சூழ்நிலை அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படுகிறது.
எல்லா தலைவர்களும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர். சி.பி.ஐ தவறாக மத்திய அரசு பயன்படுத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுபற்றி கருத்து கூற முடியாது.
ஆன்லைன் சூதாட்டிற்கு ஆளுநர் தடை விதித்து அனுமதி தந்தே ஆகவே வேண்டும் அதனை பெட்டிற்கு அடியிலேயே வைத்திருக்க முடியாது என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.