ஊழல் செய்த பணம் செந்தில் பாலாஜியிடம் உள்ளதா? ஜோதிமணி பேச்சால் திமுக அப்செட்..!!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட லந்தக்கோட்டை, பாளையம், மேட்டுக்களத்தூர், சேவைக்காரன்பட்டி, கோட்டாநத்தம் நாச்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் கரூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அரச அர.சக்கரபாணி ஜோதிமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் கீழே கிடந்தது அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்கிருந்த வயதான முதியவர் எடுத்துச் சென்ற ஊன்றி வைத்தார். இதுதான் இவர்கள் கூட்டணி கட்சிக்கு கொடுக்க மரியாதையா என்று கேள்வி எழும்பியது.
மேலும் தொண்டர் ஒருவர் அதிகாலையிலேயே அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு இந்த வழியாக வாகனம் செல்லக்கூடாது என்றும் அட்ராசிட்டி செய்தார்.
பின்னர் ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாஜக வேட்பாளர், ஜோதிமணி தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்தார் என்று நிரூபிப்பவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ரூபாய் நோட்டை காட்டி பேசியதைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஜோதிமணி பாரதிய ஜனதா கட்சியிடம் இந்த நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்து பணம் குவிந்து கிடக்கிறது என்றும் ஊழல் செய்த பணம் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் செய்த பணம் நரேந்திர மோடி இடம் மட்டுமில்லாமல் அண்ணாமலை செந்தில் பாலாஜி என்று சொல்ல வந்துவிட்டு சுதாரித்துக் கொண்டு செந்தில்நாதன் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிஜேபி ஆட்சியில் நாட்டு மக்களிடம் ஒரு 500 ரூபாய்க்கு கூட இல்லை ஆனால் பாஜக வேட்பாளர் 50ஆயிரம் ரூபாய் வைத்து ஆட்டியது அனைத்துமே ஊழல் பணம் தான் என்று பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.