ஜெ., நினைவிட நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒருசேர பார்க்க வேண்டாம் : அமைச்சர் வேண்டுகோள்!!

28 January 2021, 4:20 pm
Minister Kadamboor - Updatenews360
Quick Share

மதுரை : ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை என மதுரையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார்.

மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, செல்லூர் கே.ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “ஜெயலலிதா மட்டுமே தலைவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்டினார், ஜெயலலிதா தலைவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டார், மதுரையில் மன்னர் திருமலை நாயக்கருக்கு முழு உருவ வெங்கல சிலை நிறுவப்படும், வேதா இல்ல வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு வரும்போது தான் தெரியும், வேதா இல்லத்தை மக்கள் விரைவில் பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலம் அனைத்து விதிமுறைகளைகளும் பின்பற்றப்பட பின்னரே வேதா இல்லம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது, ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை, ஜெயலலிதா நினைவிட திறப்புக்கு கூடிய கூட்டம் தன்னெழுச்சியாக கூடிய கூட்டம் என கூறினார்.

Views: - 14

0

0