‘சவுண்டு போடாம போங்க‘ : வாகன சத்தத்திற்கு அஞ்சாத சிறுத்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2021, 9:41 am
Leopard -Updatenews360
Quick Share

ஈரோடு : திம்பம் மலைப்பாதை தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

பண்ணாரியில் இருந்து மைசூர் செல்லும் இந்த வனச்சாலையில் திம்பம் மலைப்பாதை உள்ளது. இச்சாலை வழியாக வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருக்கும். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தாளவாடி நோக்கி காரில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தின் சத்தம் கேட்டு எழுந்த சிறுத்தை, அதை பொருப்படுத்தாமல் மீண்டும் தடுப்பு சுவரில் படுத்து கொண்டது. இதை தனது செல்போனில் வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Views: - 308

0

0