“வண்டியை நிறுத்தாம போடா“ : :மூன்று பேரை விரட்டி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1 February 2021, 2:36 pm
Cannabis Arrest - Updatenews360
Quick Share

கோவை : கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 கஞ்சா வியாபாரிகள் போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாமநாயக்கன்பாளையம் அறிவொளி நகர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்த முயன்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களும் பைக்கை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் மூன்று பேரிடம் கத்தி இருந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டி (வயது 23) அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) கோவை சாய்பாபா காலனி சேர்ந்த கமலேஷ் (வயது 22) என்பதும் இவர்கள் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களின் கூட்டாளிகளான ராஜேஷ், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0