நீர் நிலைகளில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்க வேண்டாம்…! ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…!!

3 December 2019, 9:35 pm
Chenagal Radha-updatenews360
Quick Share

செங்கல்பட்டு : நீர் நிலை பகுதிகளில் செல்பி எடுத்ததை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கல்பட்டில் உள்ள பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களிலுள்ள 924 சேரிகளில் 550 ஏரிகள் நிரம்பி உள்ளதாகவும் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 109 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பேரிடர் மீட்பு குழு 24 மணி நேரமும் முழு கண்காணிப்பில் உள்ளதாகவும் 7 குழுக்கள் மட்டும் தென் தமிழகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும், நீர் நிலை பகுதிகளில் செல்பி எடுத்ததை பொதுமக்கள் தயவுசெய்து தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.