இரட்டை அர்த்தம், பாலியல் சீண்டல், அறுவறுத்தக்க செயல் : மாணவிகள் புகாரால் பிஷப் கல்லூரி தமிழ்துறை தலைவர் நீக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 8:21 am
Bishop College - Updatenews360
Quick Share

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கூறியுள்ளதால் தமிழ் துறை தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் ஒரு சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையல் கல்லூரிகளிலும் மாணவிகளிடம ஆசிரியர்த தகாத முறையில் நடந்து கொள்வதாக தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பட்டமேற்படிப்பு படித்த சில மாணவிகள், தமிழ்த் துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர்.

அதில், வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உச்சகட்டமாக, சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப் படுத்துகிறார். அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர், துறைத்தலைவரை பார்க்க போகும்போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என வலியுறுத்துகிறார். இதனால், கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த புகாரை அடுத்து கல்லூரி நிர்வாகம் தமிழ் துறை தலைவர் பால்சந்திரமோகனை நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாக மாணவிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 359

0

0