வரதட்சணை கொடுமை : எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்த இளம்பெண்.. கணவனை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலைமறியல்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 11:04 am
Wife Suicide Protest - Updatenews360
Quick Share

திருக்கோவிலூரில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சந்தைப்பேட்டையைச் சேர்ந்த காதல் திருமணமான ஓராண்டில், அப்சா என்ற பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பெண்ணின் தற்கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சந்தப்பேட்டையில் இந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலையப் போலீசார், விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவர்- (தஸ்தகீர்) நாங்கள் கைது செய்திருக்கிறோம். மேலும், இந்த பெண்ணின் தற்கொலைக்குக் காரணமான மற்றும் பலரை விரைந்து கைது செய்வோம் என, போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 171

0

0