சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த செல்வம்- ஜெயந்தி தம்பதியரின் மகளான நிர்மலாவிற்கும் கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் நீலமேகம் -உமாராணி தம்பதியரின் மகனான சற்குணன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்காக 75 சவரன் நகை 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணம் ஆகி சில மாதங்களுக்கு பிறகு அவ்வப்போது பணம் வேண்டும் நகை வேண்டும் என்ற அடிப்படையில் சற்குணன் தனது மனைவி நிர்மலாவை சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் போதையில் மனைவியை டார்ச்சர் செய்தும் பணம் கொண்டு வரவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி பேனாவைக் கொண்டு தனது கைகளில் குத்திக்கொண்டு மிரட்டல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நிர்மலாவின் தந்தையான செல்வம் உயிரிழந்துள்ளார். அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் நிர்மலாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அதற்கு முன்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி தந்தை உயிரிழப்பிற்காக நிர்மலாவின் தாய் வீடான சிங்கம்புணரிக்கு சற்குணன் அனுப்பிய நிலையில் நிர்மலாவிற்கு குழந்தை பிறந்தும் நிர்மலாவை வீட்டிற்கு அழைக்காமலேயே இருந்துள்ளார் சற்குணன்.
பின்னர் இரு குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நிர்மலாவை கோவைக்கு அனுப்பிய சூழலில் சில மாதங்கள் மட்டும் நிர்மலாவுடன் கோவையில் வசித்த சற்குணன் மீண்டும் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற காரணத்திற்காக நிர்மலாவை தாய் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
தடுப்பூசி போட்ட பின்னர் நிர்மலா தன்னை கோவை அழைத்துச் செல்லுமாறு கூறியபோது சற்குணன் தனது நண்பரான நிவாஸ் என்பவரை வைத்து தனது செல்போன் மூலம் அடிக்கடி நிர்மலாவின் செல்போன் என்னை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
மேலும் நிவாஸ் தனது அண்ணன் என்றும் அவருடன் நீ பேசி பழகினால் தான் மீண்டும் உன்னை கோவைக்கு அழைத்து வருவேன் என்றும் சற்குணன் நிர்மலாவை கூறி கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா நிவாஸ் மீது கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சற்குணன் 2023 ஆம் ஆண்டு நிர்மலாவிடமிருந்து தனக்கு விவாகரத்து பெற்று தருமாறு கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் நிர்மலாவிற்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து கணவன் மனைவியிடையே பிரச்சனை நிலவி வந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் பீளமேடு பகுதியிலுள்ள வீட்டிற்கு குழந்தையுடன் வந்து குடியேறிய நிர்மலா தனது தாயிடம் பணம் வாங்கி குழந்தையை தனியார் பள்ளியில் எல் கே ஜி சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நிர்மலாவின் தாய் ஜெயந்தி பீளமேடு பகுதியிலுள்ள நிர்மலாவின் வீட்டிற்கு வந்து இன்று காலை சற்குணனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கணவன் மனைவியை சேர்த்து வைக்கலாம் என எண்ணியிருந்த நிலையில் திடீரென இன்று காலை நிர்மலாவின் வீட்டிற்கு வந்த அவரது கனவர் சற்குணன்,மாமனார் மாமியார் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிலிருந்த நிர்மலா அவரது தாய் ஜெயந்தி மற்றும் சகோதரர் ஹரிஹரன் ஆகியோரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மனைவி நிர்மலாவின் சகோதரர் ஹரிஹரன்
அப்போது நிர்மலாவையும் அவரது தாய் ஜெயந்தியையும் கண்மூடித்தனமாக தாக்கிய அங்கு வந்த அடியார்கள் கணவனை இழந்த மூத்த பெண்ணான ஜெயந்தியை நான் தான் உன் கணவன் என்று கூறி தகாத இடத்தில் கை வைத்து அநாகரிகமாக நடந்து கொண்ட அடியார்களில் சிலர் அவரது ஆடைகளை கிழித்தும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து நிர்மலா அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் நிர்மலாவை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற சூழலில் உடலில் காயங்களுடன் கிழிந்த ஆடையுன் அவரது தாய் ஜெயந்தி அதே வீட்டிலேயே உள்ள நிலையில் நிர்மலாவின் மாமனார் மற்றும் மாமியாரும் வீட்டை தாழிட்டு கொண்டு அதே வீட்டிலேயே இருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே காலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நிர்மலா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.