வரதட்சணை கொடுமையால் குழந்தையுடன் தாய் தற்கொலை : கணவர் மற்றும் மாமியார் கைது!!

14 September 2020, 4:22 pm
Suicide Husband Arrest- updatenews360
Quick Share

சென்னை : புழல் அருகே குடும்பத்தகராறு காரணமாக ஒன்றறை வயது மகனுடன் தாய் தூக்கிட்டி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார், இவருடைய மனைவி பாக்கியலட்சுமி இருவரும் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மித்ரன் என்ற ஒன்றை வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாக்கியலட்சுமி குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவரான ரஞ்சித் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி கணவர் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் தனது ஒன்றை வயது மகனுடன், கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த புழல் போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வரதட்சணை கொடுமை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து பாக்கியலட்சுமியின் கணவர் ரஞ்சித் குமார் மற்றும் பாக்கியலட்சுமியின் மாமியார் சாந்தி இருவரையும் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

Views: - 5

0

0