யானைகள் நடமாட்டத்தை காட்சிப்படுத்திய டிரோன்!!
19 August 2020, 10:19 amகோவை : கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க விடப்பட்ட ட்ரோன் கேமராக்களில் யானைகள் வரிசையாக செல்வதை உற்றவன் கேமரா காட்சிப்படுத்தி உள்ளது.
கோவை வனக் கோட்டத்தில் மட்டும் கடந்த ஏழு மாதங்களில் 17 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இதனால் வனஆர்வலர்கள் யானைகளை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்,.
இந்த நிலையில் யானைகளின் உயிரிழப்பை தடுக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. யானைகளின் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையல் சிறுமுகை , பெத்திக்குட்டை, காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகள் வரிசையாக நடந்து செல்வது,நீர்நிலைகளில் தண்ணீர் குடிப்பது போன் காட்சிகள் அழகாக படம் பிடிக்கப்பட்டு உள்ளது இதனை தற்போது வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்