5 ரூபாய்க்கு பேண்டேஜ் கேட்ட போதை ஆசாமிகள் : இல்லை என கூறிய மருந்தக ஊழியருக்கு கத்திக்குத்து… ஷாக் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan13 ஜூன் 2022, 2:20 மணி
தேனி : போடிநாயக்கனூரில் குடிபோதையில் வந்த இருவர் தன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு பேண்டேஜ் வாங்க வந்த கடையில் பணியாற்றி வந்த சரவணன் என்பவர் மீது கத்தியால் குத்திய சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சூர்யா மெடிக்கல் ஷாப்பில் நேற்று இரவு 9 மணி அளவில் போடி காலனியில் வசித்து வரும் கருப்பையா மகன் கண்ணன் என்பவரும் அவரது கூட்டாளி வடிவேல் ஆகிய இருவரும் குடிபோதையில் சென்று சூர்யா மெடிக்கல் உரிமையாளர் நெடுஞ்செழியன் என்பவரது கடையில் பணியாற்றி வரும் சரவணன் என்பவரிடம் குறைந்த அளவில் 5 ருபாய் (குறைந்த விலையில் பேண்டேஜ்) பணம் கொடுத்து மெடிக்கல் உபகரணம் கேட்டுள்ளனர்.
இந்த விலைக்கு மெடிக்கல் உபகரணங்கள் தர முடியாது என்று மெடிக்கல் கடையில் பணியாற்றி வரும் ஊழியர் சரவணன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தணது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கண்ணன் குத்தியுள்ளார்.
காயமடைந்த சரவணன் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் அளித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் நேரடியாக சென்று சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கத்தியால் தாக்கிய கண்ணன் மற்றும் வடிவேல் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போடி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
குறைந்த விலையில் பேண்டேஜ் தர மறுத்த கடை ஊழியரை இருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0