கோவை : இரு சக்கர வாகன ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்து இளைஞரை போதை ஆசாமிகள் வெட்டிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் எஸ்.எஸ்.பைக் பாயின்ட் என்ற பெயரில் ஓர்க்ஷாப் நடத்தி வருபவர் ஷெரிப். இவரிடம் வேலை பார்த்து வருவர் ரவிக்குமார்.
நேற்று மாலை ரவிக்குமார் மட்டும் ஓர்க்ஷாப்பில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் 3 பேருடன் ஓர்க்ஷாப்பிக்கு வந்துள்ளார். அனைவரும் குடிபோதையில் இருந்த நிலையில் வாகனம் தொடர்பாக உரிமையாளரிடம் பேச வேண்டும் என சொல்லி இருக்கின்றனர்.
தனது செல்போன் மூலம் ஷெரிப்பிடம் பேசிய அவர்கள் , பின்னர் செல்போனை திருப்பிக்கொடுக்காமல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஓர்க்ஷாப் தொழிலாளி ரவிக்குமார் தனது செல்போனை திருப்பி கொடுக்கும்படி கேட்கவே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் போதையில் இருந்த நபர்கள் ஓர்க்ஷாப்பில் இருந்த அரிவாளை எடுத்து ஊழியரின் கையினை வெட்டினர். இதில் ரவிக்குமார் கையில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடைக்குள் புகுந்து அரிவாளால் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
ஜேசன் சஞ்சய்யின் என்ட்ரி விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய்…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
This website uses cookies.