சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி : தினம் தினம் போதை ஊசிகள், பொருட்கள் குப்பையாக குவிந்து கிடக்கும் அவலம்!!

9 July 2021, 12:10 pm
Drugs In School- Updatenews360
Quick Share

கோவை : மதுக்கரை சுகுணா புரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம், சமூக விரோதி கூடமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மதுக்கரை, சுகுணா புரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் 1987-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இதில் சுமார் 900 பள்ளி மாணவ மாணவிகள் படித்து வந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக இந்த பள்ளியின் வளாகத்திலும் வகுப்பு வரையிலும் போதை பொருட்கள், கஞ்சா போதை ஊசி போன்ற அனைத்து செயல்களும் விற்பனையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த பள்ளி வளாகத்தில் பல்வேறு இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்கள், எனவும், தினம் தினம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊசிகளும், போதைப் பொருட்களும் அங்கு குப்பையாக அருகில் போட்டு செல்லுகின்றனர் எனவும், அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையிடம் இது சம்பந்தமாக, பலமுறை புகார் தெரிவித்தும், காவல்துறையும் கண்டும் காணாமல் இருந்து கண்டிருக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவர்களின் வாழ்வை மேம்படுத்தும் பள்ளிகூடம், மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இந்த செயலை, தமிழக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று, கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

மேலும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறை அதிகாரிகளும் இதற்கு நடவடிக்கை எடுத்து போதையில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களை மீட்டெடுக்க பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின், மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது தனது அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 128

0

0