மருந்தகங்களில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையா? போலீசாருடன் அதிகாரிகள் திடீர் ரெய்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 7:09 pm
Medical Raid - Updatenews360
Quick Share

திருப்பூரில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் போதை மாத்திரை விற்பனையா,,,?காவல் உதவி ஆணையர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் சோதனையால் பரபரப்பு.

திருப்பூர் நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன் படுத்துவதாகவும், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.

மேலும் நேற்று முன்தினம் மருந்துக்கடை உரிமையாளர் ஒருவரை இரண்டு இளைஞர்கள் போதை மாத்திரை கேட்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இன்று வடக்கு உதவி ஆணையர் அனில்குமார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் திருப்பூர் ராம் நகர், பெருமாநல்லூர் சாலை, கொங்கு மெயின்ரோடு மற்றும் எஸ்வி காலனி, சாமுண்டி புரம், கேத்தம்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள தனியார் மெடிக்கல் ஷாப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.

இங்கு வலி நிவாரண மருந்து மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரை இன்றி கொடுக்கப்பட்டதா,,?? எனவும்,வலி நிவாரண மாத்திரைகளை இளைஞர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனரா என கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவை போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினர் மெடிக்கல் ஷாப்களில் அறுவை சிகிச்சைக்கான மருந்துகளை போதைக்காக விற்பனை செய்ததாக சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் ஒட்டு திரவத்தை சிறுவர்கள் வாங்கி போதைக்காக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் வலி நிவாரண மாத்திரைகள் போதைக்காக கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 804

0

0