போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இலங்கையை சேர்ந்த நபர் சிறையில் அடைப்பு

4 July 2021, 8:59 pm
Quick Share

காஞ்சிபுரம்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காஞ்சிபுரத்தில் பதுங்கி இருந்த இலங்கையை சேர்ந்த நபரை கோயம்புத்தூரில் வைத்து கியூ பிரான்ச் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சர்வதேச அளவில் போதை கடத்தலில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த ஒரு கும்பல் கேரள மாநிலம் அங்கமாலி பகுதியில் பதுங்கி இருந்ததை மாநில தீவிரவாத எதிர்ப்பு பிரிவினர் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் சரவணன் , குமார் என்பவர்களை கேரள மாநிலத்தில் வைத்து தீவிரவாத எதிர்ப்பு பிரிவினர் கியூ பிரான்ச் விசாரணை செய்து வருகிறார்கள்.

அதேபோல் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து தற்போது கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த இலங்கை மோதிரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கின்ற சுரேஷ்ராஜனை காஞ்சிபுரம் கியூ பிரான்ச் பிரிவினர் நேற்று கைது செய்து காஞ்சிபுரம் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர். குற்றவாளியை கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சுரேஷ் என்ற சுரேஷ் ராஜனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

சுரேஷ் என்ற சுரேஷ் ராஜன் மீது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் ஆயுத வழக்கு, வெளிநாட்டினர் வழக்கு, போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளிட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ் எ சுரேஷ்ராஜனை போலீசார் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 110

0

0