‘ஆட்சியே எங்களோடதுதான்’.. ரேசன்‌ கடை விற்பனையாளரிடம் குடிபோதையில் திமுக நிர்வாகி ரகளை..!

Author: kavin kumar
8 August 2021, 10:36 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே ரேசன்‌ கடை விற்பனையாளரிடம் திமுக நிர்வாகி குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை இயங்கி வருகிறது. இங்கு தற்காலிக விற்பனையாளராக பணிபுரிந்து வரும் ஊழியர்கள் நேற்று பொது மக்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களை வினியோகம் செய்து கொண்டிருந்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக நிர்வாகியுமான மூர்த்தி என்பவரின் தந்தை 4 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வேண்டுமென விற்பனையாளரிடம் கேட்டத்தாகவும், பயோமெட்ரிக் முறைப்படி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால் குடும்ப அட்டைதாரர்கள் நேரில் வரவேண்டும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தனது தந்தைக்கு பொருட்களை வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி மூர்த்தி என்பவர் குடிபோதையில் விற்பனையாளரை தாக்க முயன்றதாகவும், ஆட்சியே எங்களுடையது என மிரட்டல் விடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அல்லது நியாயவிலைக் கடையில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 247

0

0